திராவிடம் அல்ல திருவிடம்
திராவிடம் அல்ல திருவிடம் !
திருவிடம் என்பதே சுத்தமான தமிழ்ச்சொல்.
தமிழ் சித்தர் பெருமக்கள் சான்றோர்கள் தங்கியிருந்த நிலப்பகுதிக்கு அதாவது அன்றைய தமிழ்நாடு (தென்னிந்தியாவிற்கு)
"திரு" என்பது இறைவனை குறிக்கும் சொல்.
அதனாலேயே "அனைத்து (சாதி மதம் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து)" மனிதர்களின் புருவ மத்தியான சிற்றம்பலம் தில் இறைவன் இருப்பதால் இடவாகு பெயராக அனைத்து மனிதர்களையும் திரு. என்ற அடை மொழி இட்டு அழைக்கிறோம். உதாரணத்திற்கு திரு. காமராசர் அவர்கள் என்று அழைக்கிறோம்.
இறைவன் பெரும்பாலான நாடுகளில் உள்ள மனிதர்களிடம் வெளிப்படாமலே மறைந்து இருக்கிறார். ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே ஆதிகாலம் தொட்டு பெருமளவில் சித்தர்கள், அருளாளர்கள் மூலமாக அதிக அளவில் வெளிப்பட்டு கொண்டு இருக்கும் இடம் என்பதால் தமிழ்நாட்டை (அதாவது அக்கால தென்னிந்தியாவை) திருவிடம் என்ற அறிவார்ந்தவர்கள் அழைக்க ஆரம்பித்து பிறகு அது திராவிடம் என்ற வழக்கு மொழியில் மருவியது.
இதை நிரூபிக்கும் வண்ணம் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் மனிதராக தமிழ்நாட்டில் பிறந்து இதுவரை எந்த சித்தர்களும் அருளாளர்களும், கடவுளர்களும் (பிரம்மா, விஷ்ணு, மற்றும் உருத்திரன்) ஆகிய யாவரும் அடைந்திராத உயர் நிலையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் (சிவபெருமானின் நிலையையே) அடைந்து தமிழ்நாடு திருவிடம் என்பதை நிரூபித்தக் காட்டியுள்ளார்.
மற்ற மனிதர்களும் அதே இறை நிலையை அடைய திருவருட்பா எனும் நூலை இயற்றி நாம் அனைவரையும் நெறிப்படுத்த சன்மார்க்க நெறியையும் உருவாக்கி அவரை போலவே உயர் நிலையை அடைய தேவையான அனைத்து வழிமுறைகளையும் விளக்கி உள்ள இறை மொழியே திருஅருட்பா எனும் நூல் ஆகும்.
ஆற்காட்டார், வாழப்பாடியார் என்றெல்லாம் நிலத்தின் பெயரால்
அழைப்பதை போன்றே தமிழில் இடவாகு பெயராக
திருவிடத்தை சேர்ந்த அறிவுசார் பெருமக்கள் திருவிடம் என்றும் அங்கு இருந்த மக்களை திருவிடம் + வசிப்பவர்கள் = திருவிடர்கள் என்று சுத்தமான தமிழில் அழைக்கப்பட்டார்கள்.
அதுவே பின்னாளில் திராவிடர்கள் என்றானது
திராவிடம் என்பதன் இயற்பெயர் திருவிடம்.
திருவிடம் என்பது அன்றைய லெமுறியா என்று அழைக்கப்படும் இளமுறியா கண்டத்தில் இருந்த மோகம் சிதறா, அருள்பா, மருதை ஆகிய நகர்களையும் இன்றைய தென்னிந்தியாவையும் உள்ளடக்கிய பகுதியே பரந்த தமிழ்நாடாக இடத்தினை குறிக்கும் சொல்லாகவும் இருந்து அதையே திருவிடம் என்ற சிறப்பு இடவாகு பெயராகவும் அழைக்கப்பட்டு வந்து இருக்கிறது.
அதாவது திரு-இடம் /அங்கு கூடி தமிழ்செய்த அறிஞர் பெருமக்கள் திருவிடர் என்று அழைக்கப்பட்ட்டனர்.
இதற்கான ஆதார நூலாக கீழே காணப்படும் நூல் உள்ளது.