திருக்குறள் தலைப்பு : மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று
The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; ‘twill cause disease.
மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.
If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical)writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்
No need of medicine to heal your body’s pain, If, what you ate before digested well, you eat again.
முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again.
முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
If (one’s food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து
Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree.
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ணவேண்டும்.
(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry,whatever is not disagreeable (to you).
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு
With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel.
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
There will be no disaster to one’s life if one eats with moderation, food that is not disagreeable.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்
On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure.
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை நிற்பது போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.
As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்
Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains.
பசித்தியின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்
Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.
Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்
The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill.
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.
The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால்நாற் கூற்றே மருந்து
For patient, leech, and remedies, and him who waits by patient’s side, The art of medicine must fourfold code of laws provide.
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.