August 26, 2023

நினைப்பு மறைப்பு

நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம்:

சந்திரன் அக்கினியோடு கூடி, சூரியபாகத்திலுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும் போது, உண்டாகும் நினைப்பு; சூரியன் அக்கினியோடு கூடி, சந்திர பாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும்போது உண்டாகின்றது மறைப்பு.

நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்:

நினைப்பென்பது யாது?

ஜனனம், மன அசைவு, ஒன்றை நினைத்தல், சகலகாலம், மேற்படி தத்துவம் வேறொன்றில் பற்றல், தத்துவத்தின் அசைவாகிய ஆவி மேலேறுதல், மேற்படி ஆவி ஏறின இடத்தில் நில்லாது அக்கிரமித்தல்.

மறைப்பென்பது யாது?

மரணம், தூக்கம், மனம் ஒன்றைப்பற்றி உடனே மறைதல், கேவலகாலம், மேற்படி தத்துவத்தின் கூர்மை கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை இல்லாதிருத்தல், மேற்படி ஆவி அக்கிரமித்தல், மனம் ஆபாசப்பட்டுச் சூனியமாதல்.

மேற்குறித்த நினைப்பு மறைப் பற்று நிரதிசயானந்தமாய் அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்க சாதனம்.


நினைப்பு மறைப்பு

இந்த ஜீவன் அக்கினியின் சூரியபாகத்தி லுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும்போது நினைப்பும், அக்கினியின் சந்திரபாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும் போது மறைப்பும் உண்டாகின்றன. இதுதான் நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம்.

நினைப்பு மறைப்பு

நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்:

நினைப்பென்பது ஜனனம், மனம் நினைத்தல், சகலம், தத்துவத்தின் ஆவி அதிக்கிரமிக்கிறது.

மறைப்பென்பதற்குப் பொருள்:

மரணம், கேவலம், தூக்கம், தத்துவத்தின் கூறுபாடு கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை யில்லாதிருத்தல், அதனது உஷ்ணம் அதிக்கிரமிக்கிறது, மனம் ஆபாசப்பட்டுக் கீழ்ச்செல்லுதல்.

ஆதலால், நினைப்பு மறைப்பு அற்று, நிரதிசயானந்தமாய் அருள்வடிவமாவதே சுத்தசன்மார்க்க சாதனம் இது ஒருவாறு.

source : வள்ளலார் உபதேசப் பகுதி