July 23, 2023

Test

Fantabulous! Your article will be called "பரநாதம் (பரநாதர், பரசிவம், பரப்பிரம்மம்)

(வைணவ சமயத்திலுள்ள பிழைகளும் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது)

(பரசிவ வணக்கம் - பரப்பிரம்மம்)

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே
அன்புரு வாம் பரசிவமே.

- திருவருட்பா

அதிக்கிராந்தம், திக்கிராந்தம் என்னும் சித்துறுவெளிக்கு உள்ளே, பரநாதம் மற்றும் பரவிந்துவும் சேர்ந்த பரவெளியும், அதற்கு உள்ளே ஒட்டுமொத்த எல்லா பிரபஞ்சங்களும் உள்ளது.

பரநாதம் (பரப்பிரம்மம், பரசிவம்) மற்றும் பரவிந்து (பரபரமம், பரசத்தி) சேர்ந்ததே பரவெளி, இதற்கு பதியாயிருப்பவர் பரசிவபதி (பரப்பிரம்மம்) அவருக்கென்று பரசிவ அண்டங்களயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமைத்திருக்கிறார்.

பரசிவ பதியைப் பரசிவா அண்டங்களை அரசுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி - அகவல்

***இந்த பரநாதமென்னும் பரப்பிரம்மத்திற்கு உள்ளே எல்லா பிரபஞ்சங்களும் அதற்கு உள்ளேயிருக்கும் அனைத்தும் அடங்கிவிடும்.

இந்த பரப்பிரம்மத்திற்கு கீழேதான் பிரம்மம் ஆகிய சிவமும், பரமம் ஆகிய சத்தியும் அதற்கு கீழே ஐவராதிகளும் உள்ளனர், இங்கேதான் வைணவ சமயத்தில் குழப்பி உள்ளனர், ஐவராதிகளிலுள்ள திருமாலையும், பரநாதமாயிருக்கும் பரப்பிரம்மத்தையும் இணைத்து குழப்பியுள்ளனர், பரநாதத்தை அவர்கள் திருமாலாக கருதி தவறான புரிதலில் இப்படி பார்க்கின்றனர், திருமாலை நாராயணன் எனவும், பரநாதத்தை ஆதிநாராயணன் எனவும் பிரித்து கூறாமல் குழப்பியுள்ளனர், ஆதிநாராயணன் என்பது பரநாதமேயாகும் இதுவே பரசிவமுமாகும், இதிலிருந்து வெளிப்பட்டதே சிவம், சத்தி மற்றும் ஐவராதிகள் (திருமால் உட்பட)

இந்த பரப்பிரம்மத்திற்கு உள்ளே பிரபஞ்சமே அடக்கம் என்பதால், இதன் அவதாரமாக கிருஷ்ணரை காட்டியுள்ளனர், இந்த பரப்பிரம்மத்தின் மனித அவதாரமாக கிருஷ்ணரை காட்டி, அவர் பகவத் கீதையை கூறுவதாக உள்ளது, இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சங்களும் இதிலுள்ள அனைத்தும், அதாவது மரம், விலங்குகள், பறவைகள், மலைகள், மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள், சிவம்சத்தி, ஐவராதிகள் என அனைத்தும் அடக்கம் என்பதால், கிருஸ்ணர் நானே அனைத்தும் என்னிலிருந்தே அனைத்தும் வெளிப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த வெளிப்பாட்டை வைணர்வர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆகவே கிருஷ்ணரே முழுமுதற் கடவுளாக தவறாக பார்க்கின்றனர், நாம்தான் இவர்களுக்கு இந்த உண்மையை புரிய வைக்க வேண்டும், இந்த பரநாதமென்னும் பரப்பிரம்மத்திற்கு மேலே பல வெளிகளை கடந்து அருட்பெருவெளியில் அருட்பெருஞ்ஜோதியர் உள்ளார் என்பதை நாம் அவர்களுக்கு கூற வேண்டும்.

பரநாதத்துக்குள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அடங்கும் என்பதால் கீழ்வருமாறு பகவத் கீதையில் உள்ளது. நானே, பிரம்மா, நானே விஷ்ணு, நானே ருத்திரன், நானே அரிஜுனன், நானே மலைகளில் மேருமலை, விலங்களில் சிங்கம், பட்சிகளில் கருடன், Etc...

கீதை 10 : 8 எல்லா பவ்தீக மற்றும் அமானுஸ்ய உலகங்களின் ஆதாரம் நானே ! ஒவ்வொன்றும் என்னிடமிருந்தே வெளிப்படுகின்றன ! மிகச்சரியாக புரிந்துகொண்ட ஞானவான்கள் முழு இதயத்தோடு என்னை பின்பற்றி பக்தி தொண்டாற்றுவார்கள்

கீதை 10 : 21 ஆதித்தியர்களில் நானே விஸ்ணு ! சுடர்களில் நானே ஒளிவீசும் சூரியன் ! வாயுபுத்ரர்களில் மாருதி ! கிரகங்களில் நான் சந்திரன் !!

கீதை 10 : 22 வேதங்களில் நான் சாமவேதம் ! இந்திரலோக வாசிகளில் நான் இந்திரன் ! புலன்களில் நான் மனம் ! எல்லா உயிரினங்களிலும் நான் உணர்வுகளாக - இயல்பூக்கமாக இருக்கிறேன் !!

கீதை 10 : 23 ருத்திரர்களில் நான் சங்கரனாக இருக்கிறேன் ! யக்ஸரர்களிலும் ரக்ஸரர்களிலும் நான் குபேரன் ! வசுக்களில் அக்னி ! மலைகளில் நான் மேருமலை !!

கீதை 10 : 24 ஆசாரியர்களில் நான் பிரஹஷ்பதி ! போர்த்தளபதிகளில் நான் கார்த்திகேயன் ! நீர் நிலைகளில் நான் சமுத்திரம் !!

கீதை 10 : 25 மாகரிஷிகளில் நான் பிருஹு ! மந்திரங்களில் ஜீவனுள்ள ஓம் ! யாகங்களில் நான் மகாமந்திர ஜபம் ! அசையாப்பொருட்களில் நான் இமயமலை !!

கீதை 10 : 26 மரங்களில் நான் ஆலமரம் ! தேவதுதர்களில் ரிஷி அந்தஸ்து உள்ளவர்களில் நான் நாரதர் ! கந்தர்வர்களுள் நான் சித்ராரதா ! சுயஒழுங்கில் நான் கபிலமுணிவர் !

கீதை 10 : 27 குதிரைகளில் அமுதத்துடன் தோன்றிய உச்சைஸ்ரவா ! யானைகளில் நான் ஐராவதம் ! மனிதர்களில் நான் பேரரசன் !

கீதை 10 : 28 ஆயுதங்களில் நான் வஜ்ஜிராயுதம் ! பசுக்களில் சுரபி ! இனப்பெருக்கத்தில் நான் மன்மதன் ! சர்ப்பங்களில் நான் வாசுகி !

Etc....

*பரநாதமென்பது அருட்பெருஞ்ஜோதியரின் சிறிய வெளிப்பாடேயாகும், இந்த பரநாதத்திற்கும் பெரியவராக இருப்பவர் நம் அருட்பெருஞ்ஜோதியர்.

****"